வெள்ளி, 6 டிசம்பர், 2013

அழிந்து போன உறவு..

அழிந்து போன உறவு..

கனவுதன்னைக் கடந்து வந்தோம்
நினைவுகளோடு பழகித் திரிந்தோம்
திரைப்பாடலினுடே காவியக் காதல் பழகினோம்
நம்மில் ஒருவரையொருவர் மறவா
வரம் வேண்டிச் சன்னதிகள்பல சுற்றித்திரிந்தோம்
நெற்றிப்பொட்டில் உறவினை பதிவு செய்தலானோம்...

சென்ற திசையெங்கும் மறுநோக்க மறுதலிக்கிறது
மனசு
மருதாணி பூசிய கை யிணைவில்லாது
கனவுகள் ஒளி பெறவில்லை
நினைவுகள் நெஞ்சில் மட்டும் நிறைய
பாடல் மெல்லிசையற்ற வெற்றுக் காற்றானது
காணப் பொருளானான் வரங்கொடான்..

அழவில்லை வானமும் நீயும்
அழிந்து போய்விட்டது உறவு மட்டும் இன்று.....

கருத்துகள் இல்லை: