எம்மீனவ மக்கள்
துப்பாக்கிச் சூட்டால்
வெந்துச் சாவும் நிலைகண்டு
எழும்பாத உமதுகுரல்

எமது தங்கையர்
உடல் சிதைந்த நிலைகண்டு
எழும்பாத உமதுகுரல்

இன்று கோடிகளில் புரளும்
தேவியவளின் நிலைகண்டபொழுதில்
வெகுண்டெழுந் துள்ளீரே?

அந்நிய நாட்டில் துயர்
கொள்வது உமது
உறவானால் (இந்தியரானால்)

அண்டை நாட்டில்
சீரழிந்து கொண்டிருக்கும்
என் சொந்தங்கள்
உமக்கு (இந்தியா)
உறவற்று போயினரா?

அந்நியர்கள் நிறைவேற்றும்
தீர்மானத்தைக் கூட
போராடி உம்மை (இந்தியா)
பணியவைக்கும்
இத்திருநாட்டின் போர்வையை விலக்கி
விடுமைய்யா அரசியல்
வித்தகர்களே!!

பொது அரசியல் போர்வை
அணிந்திருக்கும்
தமிழ் அரசியல் வித்தகர்களே
கண்டிப்பதை நிறுத்தி
கட்டாய மொழி பேச
பழகுங்கள்...