வியாழன், 3 நவம்பர், 2016

கொசுவோடு வாழ்வு

அன்று காலையில் எழுந்ததுமே குழந்தையை காண்பித்து "இங்க பாருங்க பிள்ள மூஞ்சி கை காலெல்லாம் திட்டுத்திட்டா ரத்தம் பூத்துக் கெடக்கு, இதுக்கு எதாவது செய்யுங்களேன்" என்றாள். நான் மட்டும் என்ன செய்துவிட முடியும். டிஸ்கவரி தொலைக்காட்சிக் காரனே முடிவு செய்து காட்சிப்படம் வெளியிட்டுவிட்டான். உலகத்து மனிதர்களுக்கு கொசு தான் முதல் எதிரியென்று.


கடைகளில் கிடைக்கக்கூடிய ரசாயன கொசுவிரட்டி மீது பத்தாம் வகுப்பு படிக்கும் போதே நம்பிக்கையிழக்கச் செய்துவிட்டார் அய்யாத்துரை வாத்தியார். அதையும் மீறி மின் கொசுவிரட்டி பற்றவைத்து மூச்சுத்திணறியபின் விட்டெறிந்ததுதான், அத்தோடு முழுக்கு.

வேப்பிலையெண்ணைய் விளக்கும் போட்டுப்பாத்தாச்சி, சாளரம் வலைகளால் சூழப்பட்டுவிட்டது. இருந்தும் என்ன பயன். இனி ரியல் எஸ்டேட் காரன் கொசுத்தொல்லையில்லாத வீடு என்று விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு. இல்லையென்றால் வீடளவுக்கு கொசுவலை வாங்கி போர்த்திவிட வேண்டியதுதான். அறையை குளிரூட்டும் சாதனமிருந்தால் கொசு வராது என்கிறார்கள், அது மென் விசம்.


காலையில் இவள் இப்படிச் சொன்னதும், அம்மா சொல்வாள் "அஞ்சி மணிவாக்குல கதவ அடச்சிட்டு, ஏழுமணிக்கு பிறவு திறந்தா செத்தேங் கொசு வராமயிருக்கும், ஆனா நீயெங்க நாஞ்சொல்லுதத கேக்க". இது சோதனை செய்யப்பட்டிருக்கிறது எங்கள் வீட்டில். இந்த இரண்டு மணிநேரம்தான் கொசுக்கள் தொகுதி பங்கீடுகளுக்கு பிறகு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் பதுங்கிக்கொள்ளும் போலும். என்ன மாயயதார்த்தமோ.!

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

வீடளவுக்கு கொசுவலை வாங்கி போர்த்திவிட வேண்டியதுதான்.
ஹாஹாஹா ஸூப்பர் நண்பரே

'பரிவை' சே.குமார் சொன்னது…

எல்லாப் பக்கமும் கொசுத்தொல்லைதான்....
நீங்க சொன்ன மாதிரி வீடளவுக்கு கொசுவலையே சரியானது....
ஆர்டர் கொடுத்துடுங்க...