ஞாயிறு, 1 ஜூன், 2014

பாலைவனமாகும் உலகு..

காடுகளும் கழனிகளும்
அற்றுப் போயிருந்தன..
காற்றும் வீச மறுத்தது
மரங்கள் மரித்துப் போனதால்...

வயல் வெளிக்கு
ஒரு மணம்...

வாழை மரத் தோட்டத்திற்கு
ஒரு மணம்..

மலைகளுக்கு
ஒரு மணம்..

மழை சிந்திய மண்ணுக்கு
ஒரு மணம்..

மணங்களெல்லாம்
மரித்துப் போய் விட்டனவோ..

நடந்து போனால்
நாசி துளைக்கும்
கவிச்சி யில்லை ..

மிதிவண்டி மிதிக்கையில்
வேகம் கொடுக்கும்
நீண்ட பட்டைச் சாலைகளு மில்லை..

சூரியனை எதிரொளிக்கும்
சுடுமணல் மட்டு மிங்கே..

வான் நோக்கினால்
வெண்மேக மில்லை..
ஈசான மூலையில்
கரு மேகமுமில்லை...

சிந்தையில் நினைவுக ளிருக்க..
பார்வையில் இரண்டு
பகல் கொண்ட வெளிச்சம் மட்டும்..
இரவை கூட
இரவல் வாங்க வேண்டுமோ..!

2 கருத்துகள்:

பாவூர் சசி சொன்னது…

எல்லாமே மாறிபோச்சி...

rajjeba சொன்னது…

ம்ம் .... இனி மொத்தமும் மாறுமுன் விழிக்க வேண்டும்.. வருகைக்கு நன்றி..