வியாழன், 19 ஜூன், 2014

நீச்சல்போடும் நினைவுகள்..

நினைவுகள்
நீச்சல் போடும் நித்திரையில்
கண்கள் பொங்க
பார்த்து ரசித்த முழு நிலவை
மீண்டும் பார்ப்பது போலொரு பரவசம்...

சிரித்திருக்கும் நட்சத்திரங்கள்
நிலவைப் பிரிந்து
எனைத் தொற்றிக் கொண்டதுபோன்ற
பெரு நிகழ்வு..

விந்தை நிகழ்ந்த போதும்
சிந்தை கலங்காமல்
ஒவ்வொன்றாகத் தொட்டுப்பார்த்து
புது உணர்சிகளை
புரிந்து கொண்ட வேளையது..

இருளின் ஒளியை 
இருளில்தானே ரசித்து
இளைப்பாற முடியுமென
கண்திறவாது
களிப்பிலிருந்தேன்...

4 கருத்துகள்:

unmaiyanavan சொன்னது…

அடாடா, உங்களை நான் பார்க்காமல் விட்டுவிட்டேனே, இரு வாரங்களுக்கு முன்பு பார்த்திருந்தால்,தங்களை வலைச்சரத்தில் "ஒரு வயது குழந்தையை வரவேற்போம் " என்ற பதிவில் அறிமுகப்படுத்தியிருப்பேன்.
http://blogintamil.blogspot.com.au/2014/06/blog-post_1933.html.

இப்பொழுது தான் தங்களை தொடர ஆரம்பித்துள்ளேன்.
நேரம் கிடைக்கும்போது தங்களின் பழைய பதிவுகளை படிக்கிறேன்

Pandiaraj Jebarathinam சொன்னது…

Chokkan Subramanian :: வருகை செய்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் .....

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

ஆயிரம் வார்த்தைகள் சொல் எடுத்து கவிஎழுதுவதை விட இந்த நாலுவார்த்தை கவிதை மிக நன்றாக உள்ளதுபகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Pandiaraj Jebarathinam சொன்னது…

ரூபன் : வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல தோழரே..
தொடர்ந்து பயணிப்போம்...