ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

சேர்க்கையின் கவிதை

சற்று நீண்ட
பச்சைவண்ணச் இலைபெற்ற
அந்தச் செடியில்
மலர்ந்திருக்கும்
மஞ்சள் மலரின் பெயர்
எனக்குத் தெரிய வாய்ப்பில்லை
மாலை நேரத்தை
மேற்குதிசை மடிந்து சொல்லும்
அதன் சூல்களில்
சேர்க்கை செய்யும்
வௌ்ளை வண்ணத்துப்பூச்சொன்று
நொடிக்கொரு கவிதையொன்றை
பாடி படபடத்தது
தன் வௌ்ளைவண்ணச் சிறகை....

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றிகள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…


ரசித்'தேன்' நண்பரே,,,