இன்று திங்கள் கிழமை வார விடுமுறைக்குப்பின் அலுவலகத்தின் நெடியடிக்கத் துவங்கும் நாள், வீட்டில் தொடர் நாடகங்களின் பேயாட்டம் மட்டுமே பிரதானம் பிக்பாஸ் என்றால் அது என்ன என கேட்பவர்கள் தான் அம்மாவும் மனைவியும் திரைப்பட நடிகர்களை அதிகம் அறியாத அம்மா அதை பார்பதற்கு ஆவல் கொள்ளமாட்டாள் என்பது ஒருபக்கமிருந்தாலும் பக்கத்துவீட்டு அக்காள்கள் அந்நிகழ்ச்சி பற்றி இன்னும் ஏதும் பேசவில்லை என்று நினைக்கிறேன் இல்லையென்றால் என்னிடம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. என்னிடம் கேட்டால் மட்டும் என்ன சொல்ல முடியும்.
ஆனால் அலுவலகத்தில் அப்படியல்ல தொடர்ந்த விவாதங்கள், போதாததிற்கு யூடியூப் காணொளிகள் சத்தம் என அரக்கப்பரக்கிறார்கள். அநேகமா பல "session" உருவாக வாய்ப்பிருக்கிறது.
"ஊரோடு ஒத்து வாழ்" என்பது அனைத்திற்கும் பொருந்துவதில்லையாதலால் வெகுமக்கள் ஊடகத்தோடு (தேவையற்றவையோடு மட்டும்) ஒன்றாமல் இருப்பது வாழ்வை எளிய புன்னகையோடு கடந்துபோக உதவும்.
2 கருத்துகள்:
தவறு என்றாலும் ஊரோடு ஒத்து வாழ்ந்தால்தான் வாழ முடியும்போல....
பிக் பாஸ் பார்த்தே தீர வேண்டிய அளவுக்கு நல்ல நிகழ்ச்சி அல்ல :)
கருத்துரையிடுக