சனி, 4 அக்டோபர், 2025

சுதேசி எனும் பரதேசி

சுதேசி என்ற சொல்லை விளம்பரங்களிலும் சில தனிநபர்களிடமும் கடந்த சில நாட்களாக பார்க்கவும் கேட்கவும் செய்கிறேன். இன்றொரு செய்தித்தாளில் கண்டது நகைப்புக்குரியதாக இருக்கிறது, 110 பேருந்துகளைப் பயன்படுத்தி சுதேசி என்ற சொல்லை ஆங்கிலத்தில் உருவாக்கி மகிழ்ந்திருக்கிறது ஒரு ஆங்கிலப் பள்ளி. ஒரு சுதேசியாக எப்போது இவர்கள் தாய் மொழிக் கல்விக்கு மாறுவார்கள் என்ற சிந்தனை தொக்கி நிற்பது ஒரு பக்கம். கொஞ்சம் புத்திக்கு உரைத்திருந்தாலோ அல்லது எறும்பளவு மூளையில் இடமிருந்திருந்தாலோ தன் தாய்மொழியில் எழுதி மார்தட்டிக் கொண்டிருக்கலாம் ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் பரதேசியாக மாறியிருக்கிறது நம் தமிழ் மனம்.

சனி, 27 செப்டம்பர், 2025

அக்கா குருவி 23

உங்களை யார் என்று தெரியவில்லை 
உண்மையில் யார் என்று தெரியவில்லை 

எனக்கு வேண்டுவது 
இரவு 
நிலவு
கருமை

எனக்கானது அல்ல 
நிறமும் பகலும் 
அதற்குள் 
உயர்வு தாழ்வு கற்பிக்கும் 
உங்களை
உண்மையில் யார் என்றும் 
தெரியவில்லை என்றும் 
பொய் சொல்லிக் கடக்கிறேன்