புதன், 29 ஜனவரி, 2014

சுட்டியின் புது யுக்தி..!

சுண்டி விளையாட
சுட்டு விரல்
போதா தென
துணைக்கு
இந்த மாமனாம் !

அவன் ஒன்றை
தட்டினால்
இவனுக்கு இரண்டு
தட்ட வேண்டிய
நிபந்தனை ?!!

புதிய
ஆட்ட யுக்தியின்
வியப்பிலேயே
இவனை வெற்றி
கொண்டா னவன் !

ஆட்டத்தில்
வெற்றி அவனுக்கு
அதுதானே
மகிழ்வும்
இவனுக்கு !!

கருத்துகள் இல்லை: