இரண்டு வாரத்திற்கு முன் நாயொன்று தொலைவிலிருந்து ஓடிவந்து குரைத்துக்கொண்டே பக்கவாட்டில் நடந்துகொண்டிருந்தது, பாய்ந்து கடிக்க எத்தனித்தால் எதிர்க்கமுடியும் என்ற நம்பிக்கையோடு வலது கையின் விரல்களை மடக்கி தாக்குதலுக்கு தயாராக இருப்பதுபோன்ற பாவனையோடு (உள்ளுக்குள்ள பயமா இருந்தது வேற) நடந்துகொண்டிருந்தேன், அது வளர்க்கப்படும் வீடு வந்ததும் சற்று வேகமாக நடந்த நாய் எனக்கு முன்னால் தோன்றி கூர்மையான பற்களோடு அடுத்தகட்டத்திற்குத் தன்னை தயார் படுத்தியது. (எங்கள் வீட்டில் வளர்த்த நாயும், அதற்குமுன் நாயைக் கண்டால் பயந்து ஓடியதும் நொடியில் நினைவுப்படமாக ஓடியது). சாலையின் எதிர்ப்பக்கம் சென்று கல்லை எடுக்கலாம் என குனிந்தபோது கற்குவியலுக்கு மேலொரு நாய் நாக்கில் எச்சில் வடிய குத்தவைத்து உட்கார்ந்திருந்தது. (கல்லை மறந்துவிட்டு நிமிர்ந்தேன்) வழிமறித்த நாய் அதன் விட்டு எல்லையை கடந்ததும் விலகிப்போய்விட்டது. இதன் குரைப்பொலி கேட்டு நாங்கள் வசிக்கும் தெருமுனையில் ஏழு நாய்கள் தெருமுனைக் கூட்டத்தில் சொற்பொழிவு கேட்பவை போல உட்கார்ந்திருந்தவை ஒவ்வொன்றாக என்னை நோக்கி நகர ஆரம்பித்தன. மெல்ல நடந்து (பயத்தோடத்தான். ஓடுனா கடிக்கும்னு தெரியாதா!) கடந்ததும் அதனதன் இடத்திற்குச்சென்று அமர்ந்துகொண்டன அடுத்த உருவத்திற்கான எதிர்பார்ப்பில்.
இணைப்பிலிருக்கும் பதிவில் நாய்களின் ஓவியங்கள் பற்றி வாசித்ததும் நினைவிலோடியதில் சில....
https://minnambalam.com/k/2017/06/10/1497033010
4 கருத்துகள்:
நாய் துரத்தும் பொழுது எழுந்த உணர்வுகளை பதிவாக்கியிருக்கும் விதம் ...wow
ஒரு சாதாரண அனுபவத்தை அழகாக விவரித்துள்ளீர்கள்.
வாழ்த்துகள்
நன்றி சகோ!
வணக்கம் ஐயா☺
கருத்துரையிடுக