வெள்ளி, 15 செப்டம்பர், 2023

இடம் பெயர்தல்

மழை நேரத்து
தவளைக்கு
நீருமில்லை நிலமுமில்லை
அதையுண்ணும் காக்கை
கண்டதில்லை

நீர்
வரைந்த முகம்
குழிக்குள் செல்லுமுன்
அகம் தேடும் கண்ணாடி

அக்ரிலிக்
கண்ணொன்று நகர்வது போன்ற
அவதானிப்பில்
இரவு தொடங்கியதுகருத்துகள் இல்லை: