முகில்கள் அற்ற தெளிவான வானில்
இதுகாறும் மறையா முழுநிலவு
அதையொட்டி சிறகு விரித்த கரும்புறா
வாகன இரைச்சலில் தேம்பி அழும் குளிர் தென்றல்
தெளிவற்ற மனநிலையில் போக்குவரத்து சமிக்ஞை
பிறந்த குழந்தையின் பிசுபிசுப்பு இவன் கைகளில்
முழுமைபெற காத்திருக்கும் நகரத்து காலை