திங்கள், 17 நவம்பர், 2014

பேசுதலின் நிமித்தம்

பேசினோம்
பேசிக்கொண்டேயிருந்தோம்
எந்த தடையுமில்லைதான்
கொசுவைத்தவிர

என்னன்னவோ
பேசினோம்

அகமுமம்
புறமும்
நெடுநல்வாடையும்
ஏற்பாடும்
குரானும்
கீதையும்

நிலவொளியும்
மின்னொளியும்
நுரையீரல்
தின்னும் புகையும்

வேப்பமரக் காற்றும்
தென்னங்கீற்றின்
சலசலப்பும்

இளஞ்சூட்டு
குளம்பியும் தேனீரும்

இத்தோடு
முடியுமா என்றால்
இல்லைதான்

3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


பேச்சுக்கு எல்லை இல்லைதான் நண்பரே,,,
எனது தொடர் பதிவு காண்க இணைப்பு
http://www.killergee.blogspot.ae/2014/11/1.html

ஊமைக்கனவுகள் சொன்னது…

எழுத்தின் முதிர்ச்சி கவிதையில் தெரிகிறது நண்ப!
கவிதை பூடகமாய் எதையோ சொல்ல வருகிறதே.....
அப்படியே இருக்கட்டும்!
தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.