ஒவ்வொருத்தருக்கும் ஒரு சூழல் தேர்வு அதற்கேற்ற மொழியமைவு ஏற்பட்டு அற்புதத்தை நிகழ்த்திவிடுகின்றது. அசோகமித்திரனின் பறவைவேட்டை சிறுகதை தொகுப்பு. எண்பதுகளில் எழுதி இளமை மாறாமல் கதை சொல்லிக்கொண்டிருந்தது. இன்றோடு முடிந்துவிட்டதென்று இருக்கக்கூடாதென ஒரு பேராசை. அலுவலகத்தின் பொழுதில் "இனி கதைகள் வாசிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்" என சபதமெடுத்தாலும், வீடு சேர்ந்ததும் வார விடுமுறையிலும் வாசிப்பின்றி நொடி நகராது விழி பிதுங்கும் அதம நிலை.
எளவ செத்த நேரம் ஒதுக்கித்தான் வச்சா என்ன என்ற பேச்சுகளைக் கடந்து சிரித்துக்கொண்டே வாசிக்க மட்டுமே முடியும். வாசித்தால் தான் இதற்கெல்லாம் சிரிக்க முடியுமோ?!.
4 கருத்துகள்:
அருமையான பதிவு
நல்லதொரு பதிவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
வாசிப்பனுபவம் அது சுகானுபவம்...
நான் இப்போது வந்தியத்தேவனில் (பொன்னியின் செல்வன்) திளைத்திருக்கிறேன்....
அருமை
கருத்துரையிடுக