ஒவ்வொரு பக்கங்களும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தது, கரிசல்காட்டு கடுதாசிகள் வாசிக்கும் பொழுதில். வேறுவேறு கதைகள் நம்பிக்கைகளை பகடி செய்யும் கதைகள்.
கோபல்ல கிராமத்து மக்கள் என்ற புதினம் வாசித்தபோது அறிந்த தகவல்கள் ஏராளம். எல்லாம் சுதந்திரத்திற்கு முன்னான காலகட்டம். காந்தி சுதந்திரம் கிடைத்ததும் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என மும்முறை கூறியதாக சொல்லி முடியும் புதினத்தில் தேயிலைத்தண்ணீர் அறிமுகம் அதுவரையில் நீர்தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த சமூகம், தே.தண்ணீருக்கு மாறியதன் பின்னால் இருந்த வியாபார தந்திரம். பேருந்து அறிமுகம். இரண்டாம் உலகப்போர் பற்றிய காட்சிகள் என ஒன்றிலிருந்து மற்றொன்று நழுவிப்போகாத புனைவு.
எண்பதுகளில் கி.ராஜநாராயணன் எழுதிய கதவு சிறுகதை தொகுப்பு வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதைப்பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணமிருக்கிறது. இன்று இந்து தமிழில் கி.ரா வுக்கு கனடா தமிழ் இலக்கியத்தோட்ட அமைப்பு இலக்கிய சாதனை விருது வழங்கிய தகவல் வெளியாகியிருந்தது. மகிழ்ச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக