வேயன்னா எனும் வேல்சாமி தன் பரிவாரங்களோடு வெள்ளையனுக்கு அஞ்சி ஓடுவதாக தொடக்கம் கொள்ளும் கதைக்களம் விடாமல் வாசிப்பவனையும் உடனிழுத்துச் செல்கின்றது.
தப்பித்தலின் இடையில் எஞ்சியிருக்கும் சனங்களோடு கொம்பூதியில் குடியேரும் வேயன்னாவின் பரிவாரங்கள் பிழைப்பு வழி தெரியாமல் களவை தொழிலாக ஏற்றுக்கொண்டு உயிர்வாழத் தொடங்குகிறார்கள். ரேகைச்சட்டம் என்பதே கதையின் மையக்கரு, இந்த வளையத்துக்குள் இவர்கள் எப்படி சிக்கி சிதைந்து போகிறார்கள் என்பதே நாவலின் சரடு.
கதையில் விரியும் காட்சிகள் சாதிய தீண்டாமைகளையும், அதன் மிகப்பெரும் அவலமாக நீளும் தண்ணீர் கிணற்றில் மலம் கொட்டி வெறுப்பை உமிழ்வது அங்கங்கே அழுத்தமாக உரைத்துச் சொல்லப்படுகிறது. வெள்ளையன் சதி ஊர்காரனை கொலைக்குத் தூண்டுகிறதென்றால் பக்கத்தூர்காரனின் சதி இவர்களை கொலை செய்துவிடுகிறது.
ஒரு புத்தகம் வாசிப்பவனின் தேடலுக்கு 'படி'யாக அமைந்து விட்டால் அதைவிட வேறெதுவும் தேவையில்லை, அந்நோக்கில் வரலாற்றின் சில பக்கங்களை ஆழ்ந்து நோக்க தளம் அமைக்கும் கதையுள்ள எழுத்து.
4 கருத்துகள்:
ஆவலைத் தூண்டும் விமர்சனம் நன்று நண்பரே
இப்போது வர்லாற்றுப் புதினங்கள் வாசிப்பில்...
இதை வாசிக்கணும் நண்பரே...
அருமையான அறிமுகம்
இனிய தீபாவளி வாழ்த்துகள்
கருத்துரையிடுக