"Piss Christ" என்றொரு புகைப்படம் 1987-ல் "சமகால கலைக்கான தென்கிழக்கு மையம்"வழங்கிய "மெய்நிகர் கலை" விருதினை ஓவியரும் புகைப்படக்கலைஞருமான ஆன்ட்ரஸ் செரனோ என்ற அமெரிக்கருக்கு வழங்கியிருக்கிறது.
இந்த புகைப்படத்திற்கான மூலப்பொருட்கள்தான் முக்கிய பங்கு வகிப்பவை, படத்திற்கான பெயரை வெளிப்படையாக வைத்து அதற்கான விளக்கத்தையும் முன்வைத்திருப்பது சிறப்பான எதிர்ப்புக்குரலாகவே கருதவேண்டும். தான் சார்ந்த சமயம் வணிக நோக்கில் சீரழிக்கப்பட்டதை விமர்சிக்கவே இப்படிச்செய்ததாக கூறியிருக்கிறார்.
கண்ணாடிக்குடுவையில் தனது மூத்திரத்தை நிரப்பியவர், அதனுள் இயேசுவை அரைந்த சிறிய சிலுவை ஒன்றை மூழ்கடிக்கச்செய்து படமெடுத்திருக்கிறார். விளக்கமோ சரியான தலைப்போ இல்லாமல் போயிருந்தால் தங்கமாக தகதகக்கும் கிறிஸ்துவாக மாறியிருக்க வாய்ப்புண்டு.
4 கருத்துகள்:
அறியாத தகவல் நன்றி நண்பரே
extreme ... in way ok
வருகைக்கு நன்றி ☺
Yes...இன்றைய தமிழகத்தின் நிலையை இதனோடு ஒப்பிட்டுப்பார்த்தேன். ☺
கருத்துரையிடுக