ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

அந்த vibe

ஒருநாள் நாங்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு மதியம் மூன்று மணிக்குச் சென்று படியேறினோம். மாலை நான்கு மணிக்குத்தான் நடை திறப்பார்கள் என்று சடைமுடியுடன் இருந்த கிருஷ்ண பக்தர் ஆங்கிலத்தில் "4' O clock" என்று சொல்லி விட்டு அவரது துணிப் பைக்குகள் எதையோ துழாவினார். வெளியில் வந்து அங்கிருந்த வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து உரையாடினோம். "இந்த இடம் "vibe" ஆக இருக்கிறது" என்றார் எங்களில் ஒருவர். உடனிருந்தவர்களில் இருவர் ஆமாம் என்பது போன்றே தலையசைத்தனர். எனக்குப் பொதுவாக பிடித்தது பிடிக்காதது பற்றி யாராவது கேள்வி எழுப்பினால் மனம் ஒருவித குழப்பத்தில் ஆழ்ந்துவிடும். அத்தாடு இப்படி ஒருவர் தன் மனதிற்கு பிடித்த இடமாக இருப்பதை மேற்சொன்ன சொல்லால் உணர்த்த முன்வருகிறார் என்றதும் திக்கென்றிருந்தது.

மற்றொரு நாள் வேறொரு இடத்தில் நாங்கள் கூடுகையில் (எந்த இடத்தில் என இப்போது நினைவில் இல்லை ஆனால் இதுவும் ஒரு கோவில்)  அவரே சொல்கிறார் " இஸ்கானுக்குப் பிறகு இந்த இடம் தான் 'vibe' ஆக இருக்கிறது" என்று. வரையும் கோடுகளைத் தவிர்த்து அங்கும் இங்கும் எந்தப் புறக்காரணியும் எனது அகத்தைத் தீண்டவில்லை. உண்மையில் புறக் காரணங்களால் நம் அகம் தூண்டப்படுமா என்றால் ஆமாம் என்றே சொல்லலாம். அங்கே எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் ஒலித்திருந்தால் கொஞ்சம் தலையும் கை காலும் உதறல் எடுத்திருக்கும். அந்த 'vibe'.

கருத்துகள் இல்லை: