இவற்றில் எதனையும் பேணிப் பாதுகாக்க முழுமையான முயற்சியை நாம் கொடுக்கிறோமா என்றால் இல்லை. உடலைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அடிப்படையானவையான உண்ண உணவு உடுத்த உடை ஒழிந்து கொள்ள உறைவிடம் இவை மூன்றையும் பெற்றுக்கொள்ள ஓடுகிறோம் இந்த ஓட்டம் நமக்கானதாக மட்டும் இல்லாமல் நம்மைச் சார்ந்தோருக்கும் சேர்த்து ஓட வேண்டிய கட்டாயத்திற்கும் சமூக அழுத்தத்திற்கும் உட்படுகிறோம். ஓட்டத்திற்குத் தகுந்த ஓய்வும் ஊட்டமும் தேவை ஆனால் நமக்கு என்ன ஆகிவிடும் எதையும் நமது உடல் செரித்துவிடும் என்ற அறியாமையில் கண்டதைத் தின்று உடலை வருத்துகிறோம்.
குறிப்பிட்ட வயது வரை எல்லாவற்றையும் உள்ளே அனுமதிக்கும் உடல் அதன்பிறகு கழிவுகளை வெளியேற்ற வழியின்றி திணறித் திக்குமுக்காடி நம்மையும் நமது இந்நாள் வரையிலான நம்பிக்கையையும் உடைத்து உதைக்கிறது. இதை எப்படி முறைப் படுத்துவது என்பதில் யாருக்காவது அக்கறை இருக்கிறதா என்றால் உறுதியாக இருக்கிறது. "நேரத்துக்கு சாப்புடு.. நேரத்துக்கு உறங்கு...ஒழுங்கா தண்ணி குடி..." போன்ற குரல்கள் உறவுகள் நண்பர்கள் வழியே ஒலிக்காமல் இல்லை ஆனாலும் ஏன் தவறவிடுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக