வியாழன், 4 ஜூன், 2015

இந்த நொண்ணையின் பதில்

எனது நண்பன் ஒரு கேள்வி கேட்டுவிட்டு பதில் சொல்லுங்கடா நொண்ணைகளா எனக்கேட்டான். சரியெனப்பட்டதை   உணர்ச்சிவசத்தில் எழுதி அவனுக்கு அனுப்பிவிட்டேன்.

அடேய் புலிகேசி !! நானும் நீயும் ஏனைய நம் நண்பர்களும் இரண்டாம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தில் எல்லாத்தையும் கற்று வந்து, இப்போது பேச முடியவில்லை, விக்குகிறது என்று விழி பிதுங்குவதற்கு காரணம் என்ன, ஆங்கிலத்தை அறிவாளி மொழியாக உன் மீதும் அப்படி நினைப்பவர்கள் மீதும் அவிழ்க்க முடியாத கயிறு போட்டு கட்டியிருக்கிறார்கள்.

அதை அவிழ்ப்பதற்கு நீ முதலில் தமிழை உன் தாய் மொழியை தெளிவாக கற்று அறிய வேண்டும். உன் தாய் மொழியும் அதன் வரலாறும் உனக்கு அதன் மீதுள்ள தெளிவின்மையும்தான், நீ பிற மொழி  வாயிலாக கல்வி பயில வேண்டுமென நினைக்கச் செய்கிறது.

ஏன் ஆங்கிலம்? சஸ்கிருதம், பிரெஞ்ச், இத்தாலி , ஹிந்தி, உருது, இன்னும் ஏனைய இந்திய மொழிகளே நூற்று கணக்கில் இருக்கிறது அதுவெல்லாம் இல்லாமல் ஏன் ஆங்கிலத்தில் கொண்டு உன் நாக்கை (இந்த இடத்தில் ஒரு கெட்ட வார்த்தை எழுத நினைத்தேன் ஆனால் வேண்டாம் ) நனைக்கப் பார்க்கிறாய். ஏனென்றால் அது ஒரு உலக சந்தைக்கான மொழி, அதில் படித்தால் உன் மகனோ, மகளோ அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனத்தில் விலை போவார்கள். நீ இன்னும் பல லட்சங்கள் செலவழித்து உன் மகளுக்கு வரதட்சணை கொடுக்கவோ, அல்லது உன் மகனுக்கு வரதட்சணை வாங்கவோ முடியும்.

மேலும் முழுமையாக ஆங்கிலத்தில் கல்வி அறிவை புகட்டும் அளவுக்கு இங்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறாயா நண்பா?

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, நாம் அனைவரும் ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒருவர்கூட பிழை இல்லாமல் ABCD கூறவில்லை, முதல் மதிப்பெண் மாணவியும் சரி, மாணவனும் சரி.

புத்தகங்களை மனப்பாடம் செய்து மாணவர்களையும் மனப்பாடம் செய்ய செய்து, அவர்களை ஒன்றும் தெரியாத நிலையில் தான் வெளியே அனுப்பி விடுவார்கள். அப்படியே உன் குழந்தை ஆங்கிலம் தெளிவாக பேசினாலும், அது இந்த நகரத்தில் பீ பி ஓ வேலை தான் பார்க்கும், விஞ்ஞானி ஆகாது ஏன் என்றால் நீ ஆக விடமாட்டாய், சம்பாதிக்க சொல்வாய் , வீடு கட்ட சொல்வாய், திருமணம் செய்யச் சொல்வாய், வரதட்சணை வாங்க சொல்வாய், அவன் மகனையும் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கச் சொல்வாய்..

முதலில் மொழி என்பது தகவலை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஊடகம் என்பதை புரிந்து கொள். அது உனக்கு அறிவைக் கொடுக்காது, அது சார்ந்து நீதான் அறிவை கற்றுக் கொள்ளவேண்டும்.

உனக்கும் எனக்கும் கல்வி கொடுத்திருக்கிறார்கள், நாம் முதல் தலை முறை, நமக்கானது அவ்வளவு தான்.  நீ கற்றுக் கொள் எது சரி எது தவறென்பதை, இனி உனக்கு தெரிந்ததையும் அறிந்ததையும் நீ தான் உன் குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

இல்லை ஆங்கிலத்தில்தான் படிக்கச் சொல்வேன், அதுதான் உன் விருப்பம் என்றால்.

விவாதிக்க தயார் .... இன்னும் பேசுவோம் தெளிவு பெறுவோம் மொழிக்கும் அறிவுக்குமான இடைவெளியை...

போதுமா நண்பா இந்த நொண்ணையின் பதில்....

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


அருமை நண்பரே நம் தமிழைக்குறித்த தங்களது உயர்வான சிந்தனைக்கு எமது தலை வணங்குகிறேன் வாழ்த்துகளோடு....
எமது ஏரியாவிலும் சில கேள்விகள் வாருங்கள் நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆலோசனை நன்று...

Unknown சொன்னது…

அருமை

ஊமைக்கனவுகள் சொன்னது…

மொழிக்கும் அறிவிற்குமான இடைவெளி இன்று மிக அதிகரித்துவிட்டது.
மொழி சுமையாயும் தேவையற்றதாயும் ஆகிப்போனது.
நாம் உண்ணும் சோறை மலமென்று எண்ணி மயங்கித் திரியும் மனப்பாங்கு

வேறென்ன சொல்ல..?