சனி, 18 ஜூன், 2016

இயற்கையா இரசாயனமா ?

ஒற்றை வைக்கோல் புரட்சி நூல் வாங்கியதை படமாக பகிர்ந்ததும் தனக்கு வேண்டுமெனக் கேட்டான் நண்பன் விஷ்ணு. கடந்த வாரம் ஊருக்கு சென்றபோது அவனிடம் ஒப்படைத்துவிட்டேன். அதற்குமுன் பயணத்தில் வாசித்த முதல் ஐம்பது பக்கங்களே ஒரு பக்கவிளைவை உண்டுபண்ணியது. நல்விளைவுதான். எப்பொழுதும் எதையாவது பேசுவோம் அன்று இயற்கை விவசாயத்தை பற்றி பேசினோம். வளர்ச்சியின் பாதையில் அவன் பரிணமிக்க வாழ்த்துகள்.


இரண்டு நாள் முன்னர் பத்ரி சேஷாத்ரி அவரது இணையத்தில் ரசாயன உரங்களை போற்றுவோமென்று கட்டுரையொன்று எழுதி தீர்த்திருக்கிறார். அதற்கான காரணம் இயற்கை விவசாயம் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கவோ பசியை குறைக்கவோ இயலாது என்பதே (?). இது என்ன சிந்தையென்று விளங்கவில்லை.  நிதர்சனம் இதுதானா என்றொரு மிகப்பெரிய கேள்வி. பசியை போக்குவதற்காகத்தான் ரசாயனங்கள் வயல்களுக்கும் பின் வயிற்றுக்குள்ளும் புகுந்ததா. நிச்சயமாக அப்படியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. விஞ்சானத்தின் பரிசோதனை முயற்சிக்கு நாம் பலியாகிக்கொண்டிருக்கின்றோம் என்பதை மறுக்க இயலாது. ஒருவேளை விஞ்ஞானம் ரசாயனத்தை மறுத்து இயற்கையே முன்னோடி என்று கூற நேர்ந்தால் இவர்களின் எழுதுகோலும், கணினி விசைப்பலகையும் எங்கு சென்று ஒழிந்துகொள்ளுமோ?

ரசாயன உரத்தைப் பற்றி இல்லை போற்றி பேசுபவர்கள் பன்னாட்டு பற்பசை வேதிப்பொருட்களில் தொடங்கி இன்று வேம்பும் உப்பும் துளசியும் எலுமிச்சையும் கரியும் கலந்துள்ள பசையை பயன்படுத்தச்சொல்லும்  இடத்தினை அடைந்திருக்கிறதே இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?


பற்பசை என்பது சின்ன உதாரணம்தான்.


ரசாயனத்தை உரமாக இட்டு பயிர்வளர்த்து உண்பதைவிட அதையே உண்டு உங்கள் இல்லை நமது பசியையடக்கலாமே. இது மூடத்தனமாகவும் பயிர்விளைவித்து மறைமுகமாக நஞ்சையுண்பதை அறிவியலென்றும் எண்ணியிருக்க எத்தனித்தால் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.


இயற்கை விவசாயம் ஒருபுறம் செழிக்கட்டும் மறுபுறம் உணவளிக்கும் ரசாயனத்தை போற்றுவோம் என்னும் புரட்டுவாதத்தால் யாருக்கும் பயனில்லை.

விவசாயம் காக்க வழிபோவோம் இயற்கையின் பாதையிலே.

2 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

விவசாயம் பேண இயற்கையின் பாதையிலே பயணிப்போம்
http://ypvn.myartsonline.com/

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இரசாயணங்கள் இயற்கையை கூறுபோட்டு விட்டன! தவிர்க்க முடியாத ஒன்றாக இன்றைய விவசாயத்தில் கலந்துவிட்டது வருத்தமான ஒன்று!