குறிப்பிட்ட சிலருக்கு அதிகாரமோ ஆதிக்கமோ இருக்குமிடத்தில் அவர்களினிடத்தில் நாம் இருந்தால் கிடைக்கும் சலுகைகளை எண்ணிப் பாரக்காத மனமென்று ஒன்று இருக்குமா. அதிலும் திரைக் கதாநாயகர்களின் குணம்போல் உருவாகிவிட எத்தனிப்பது தமிழகத்தில் வெகு பிரபலம்.
சென்னையிலிருந்து பேருந்தில் ஊர் போகும் நெடுஞ்சாலை ஓரமுள்ள உணவகங்களில் ஒண்ணுக்கோ ரெண்டுக்கோ போக ஐந்து ரூபாய் கொடுத்தும் மிகையாய் புளித்த அல்லது புளிக்கவே புளிக்காத மாவில் சுட்ட இல்லை சுட்டது போன்ற தோசையை அறுபது ரூபாய் கொடுத்தும் வெளியேற்றவும் உட்கொள்ளவும் வேண்டிய அங்கு அதனை பணம் செலுத்தாமலே உண்டும் வெளியேற்றவும் செய்யும் ஓட்டுனராகவோ நடத்துனராகவோ ஆகிவிட்டாலென்ன என எண்ணுவதும் முதலில் சொன்னதோடு சேர்ந்ததுதானே.
1 கருத்து:
உண்மைதான் நண்பா...
மிகக் கொடுமை... நான் அந்த இடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவேன்.
வெளிநாட்டு வாழ்க்கையில் இப்போது அப்படியான பயணங்கள் அமைவதில்லை.
இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்களா?
கருத்துரையிடுக