புதன், 3 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு -3ம் வண்ணதாசனும்

ஏன் வண்ணதாசனை எப்போதுக்குமான வாசிப்பில் வைத்திருக்கிறேன் என்று எண்ணுவதுண்டு, முதன்முதல் ஒரு சிறுகதை புத்தகம் என்று வாங்கியது அவருடைய ஒரு சிறு இசை தொகுப்புதான், 2013 அல்லது 14 ஆக இருக்கக்கூடும். அடர்த்தி குறையாத எழுத்து ஓட்டம், கவிதைகளை கையோடு கொண்டுவரும் உரைநடை, தேவையற்ற சொல் என்று எதுவுமே கதைகளில் தென்படாத எழுத்து உபசரிப்பு. எதுவுமற்ற குடத்தில் நீர் நிரப்புவது போல மனதில் நினைவுகளை பரப்பும் அவரது காட்சிகள். கடந்த ஒரு மாதமாக விளையாட்டாக ஏதேனும் ஒரு பக்கத்தை புரட்டி அதிலிருந்து வாசிக்கிறேன், அவை கோடுகளாக வண்ணங்களாக என் மீது படர்கிறது. ஆழ்ந்த ஒரு மூச்சிக் காற்று எனது தேவையாகிறது.


இன்றைய தொடர் வரைவில் முகமும் உருவமும். நேற்று ஒரு எண்ணம், ஏன் ஒரு முகம் எப்படி வரைய வேண்டும் என்பதை ஒவ்வொரு படியாக இந்த வலையில் வரையக் கூடாது என.





கருத்துகள் இல்லை: