திங்கள், 8 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஆறு

 இன்று காலை எழுந்ததும் சாரல் பொசுங்கி தெரு மெல்ல தன் மீது நீர் மொட்டுக்களை கோலத்தின் புள்ளியாக்கி பரப்பியிருந்தது பார்வையில் விழவும் வெளியே செல்ல மனமின்றி வாசிக்கலாம் என மூன்றாவது வரியில் இருந்தபோது மூடிவிட்டு நடக்கப் போய்விட்டு வந்ததும் ஒரு கையளவுள்ள வரைவுத்தாளில் எதிரேயிருக்கும் புங்க மரத்தைக் கண்டேன்.


படம் ஒன்றை கண்டு வரைந்தது இவ்வம்மாவும் இக்குழந்தையும்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு இரு ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாநகர் கோபுரப் பூங்காவிற்கு (tower park என்று சொல்வார்கள்) சென்று ஆசானும் நானும் நேற்று வரைந்தோம். இது என்னுடைய பங்களிப்பு. 

கடந்த பதிவில் எண்ணெய் ஓவியம் வரையத் தொடங்கி விட்டதாக பதிவிட்டிருந்தேன் அதன் அடுத்தடுத்த படிநிலையில் நேற்று வரையிலான படம். கோட்டு வரைவுக்குப் பின் முதல் நிலை வண்ணமிடுதலை நேரலையில் முகநூலில் காண்பித்திருந்தேன். அதற்கான சுட்டி https://m.facebook.com/story.php?story_fbid=757354832152752&id=100000025390787

இன்று காலையில் கொஞ்சம் வரைந்திருந்தேன், நாளை இதன் அடுத்த கட்டத்தினை பகிர்கிறேன். கருத்துகள் இல்லை: