மழைக்காடு என்ற ஒரு வனச்சூழலின் இருப்பையே அறியாமல்தான் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக புத்தகத்தை வாசிக்கத்துவங்கினேன். காடுகள் காட்டுயிர்களைப் பற்றிய அடிப்படை புரிதல்களை ஏற்படுத்திக் கொள்வதோடு நிலைபெறாமல் உழன்றுகொண்டிருந்தவன் சதுப்புநிலம் வலசை பறவைகளைப் பற்றி அறிய தொடங்கினேன். அதன் நீட்சியாகத்தான் காடோடி வாசிப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அறியாத விலங்குகள், பிரைமேட்கள், சறுக்கிகள், இருவாசிகள், காட்டின் இசை, கினபத்தங்கான், டுரியன், குருவிங் மர எண்ணெய், மூதாய் மரமான சிலாங்கன் பத்து இன்னும் பல உயிரிகளைப் பற்றிய அறிமுகம் செய்து அவை ஒவ்வொன்றாக உயிரிழப்பதையும் வலிக்கச் சொல்லும் எழுத்து காடோடி.
அதிகமாக வாசித்து விடவில்லை தான், இருப்பினும் இதுவரையிலான வாசிப்பிலிருந்து வேறுபட்ட எழுத்து நடை.
பாமாயில் நியாய விலைக்கடையில் கிடைக்குமளவிற்கு நமக்குள் ஊடுருவி விட்டது. இந்த எண்ணை உருவாக்கத்திற்காக அழிக்கப்பட்ட காடுகள் ஏதும் கணக்கிலுண்டா. நாம் அறியாமையில் இயற்கைக்கும் மனிதத்தன்மைக்கும் எதிரானவற்றை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
புதினத்தில் புதைந்திருக்கும் மனிதர்களை பற்றி அறிந்து கொள்ளத் துவங்கும் போது உள்ளத்தில் இனம்புரியா கிளர்ச்சியும் காடு பற்றிய அறிதலின் ஊடே சிலிர்த்தெழும் கற்பனையும் வாசிப்போரை காடோடியாக மாற்றி கதைசொல்லி போலவே வெட்டுப்பட்ட சிலாங்கன் பத்து மரத்தின் மடியில் கிடத்திவிடும் காடோடி வாசிப்பு.
5 கருத்துகள்:
வணக்கம்
வித்தியாசமான வாசிப்பு வித்தியாசமான சிந்தனை பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பனை எண்ணெய் பற்றி நெஞ்சை உலுக்கும் செய்திகள் உண்டு. இப்படி ஒரு நூலைப் படிப்பதோடு நில்லாமல் அது பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் முன்வந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
அருமையான அறிமுகம்
நன்றி :-)
நன்றி :-)
கருத்துரையிடுக